திருமண சாமான்கள்
மணமகன் மற்றும் மணமகள் வீட்டிலிருந்து திருமணத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்
தொகுத்து இங்கு தரப்பட்டுள்ளது. நம்மவர்கள் வெளியிட்ட புத்தகங்களிலிருந்து இந்த தகவல் திரட்டப்பட்டு தரப்பட்டுள்ளது.
மணமகன் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:
1) திருமாங்கல்யம்
2) வெளுத்த வேஷ்டி, மேல் துண்டு, அங்கவஸ்திரம் வைத்த காரிக்கன் வேஷ்டி
3) பட்டு வேஷ்டி, மேல் துண்டு
4) மணமகளுக்கு பொன் பூட்ட வளையல் 2 அல்லது செயின் (அவரவர் சௌகரியப்படி)
5) மணமகளுக்கு ஊஞ்சல் புடவை
6) தங்கக்காசு – 2
மணமகனுக்கு மணமகனின் தாயார், மாணவறைக்கு செல்வதற்க்கு முன் வைத்துக் கொடுக்க – 1
பெண் காணும்போது மணமகளுக்கு புது மணப்பெண்ணின் மாமியார் வைத்துக் கொடுக்க – 1
7) சிவப்பு பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், உருமாலை (ஏற்பாடு செய்யவும்)
8) மணமகனுக்கு 3 டிரெஸ்
( நிச்சயதார்த்தம், திருமணம், ஊஞ்சல்)
9) நிச்சயதார்த்ததிற்க்கு பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம்
10) பரியம் செலுத்த – 1 ரூபாய் நாணயம் 51
11) நிச்சய தாம்பூல சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | தேங்காய் பெரியது | 5 |
| 2 | பழம் பெரியது | 4 சீப்பு |
| 3 | வெற்றிலை | 2 கவுளி |
| 4 | பாக்கு | 1 பெரிய பாக்கட் |
| 5 | பூ | 10 முழம் |
| 6 | விரலி மஞ்சள் | 100 கிராம் |
| 7 | குங்குமம் | 50 கிராம் |
| 8 | குங்குமச் சிமிழ் | 1 |
12)
நாழியரிசிக்கூடை சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | தேங்காய் | 2 |
| 2 | பச்சரிசி | 5 கிலோ |
| 3 | வெற்றிலை | 1 கவுளி |
| 4 | பாக்கு | பெரிய பாக்கட் 1 |
| 5 | பூம்பழம் | 1 சீப்பு |
| 6 | குங்குமச்சிமிழ் | 1 |
| 7 | வெள்ளி/எவர்சில்வர் சொம்பு | 1 |
| 8 | பூ | 5 முழம் |
| 9 | விரலி மஞ்சள் | 100 கிராம் |
| 10 | அச்சு வெல்லம் | 2 அல்லது 4 |
| 11 | நெய் | 1 பேக்கட் |
| 12 | நாழியரிசிக் கூடை | 1 |
(நாழியரிசிக் கூடை வாங்குவது அவரவர் சௌகரியம்)
13) பேழை மூடியில் வைக்க சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | தேங்காய் | 1 |
| 2 | பூம்பழம் | 1 சீப்பு |
| 3 | வெற்றிலை | ½ கவுளி |
| 4 | பாக்கு | 100 கிராம் |
| 5 | பூ | 5 முழம் |
| 6 | புதிய கண்ணாடி | 1 |
| 7 | புதிய சீப்பு | 1 |
| 8 | ஊஞ்சல் புடவை ஜாக்கட் | 1 |
| 9 | வளையல் அல்லது செயின் | 1 |
| 10 | குங்குமச்சிமிழ் | 1 |
| 11 | எழுத்தாணி | 1 |
ஒரு வெற்றிலை எடுத்து, துடைத்து காம்பு நுனி நீக்கி, உள்ளே பாக்கு துளி சுண்ணாம்பு வைத்து, பேழை மூடிக்குள், ஓரத்தில் மடித்து வைக்கவும்
14) சிறு சீர் சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | துவரம்பருப்பு | 1 கிலோ |
| 2 | மிளகு | 25 கிராம் |
| 3 | வெல்லம் | 1 கிலோ |
| 4 | உப்பு | 1 கிலோ |
| 5 | பூண்டு | ½ கிலோ |
(5 எவர்சில்வர் சம்படம் வாங்குவது அவரவர் சௌகரியம்)
மணமகள் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:
1) மணப்பெண் கூறைப்புடவை
2) நாளாணைப் புடவை
3) மிஞ்சி, கொலுசு
4) கூறைக்குப் போடும்போது வைக்க காசு மாலை அல்லது இரட்டை வட சங்கிலி
திருமண சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | மஞ்சள் தூள் | ¼ கிலோ |
| 2 | குங்குமம் | ¼ கிலோ |
| 3 | சந்தனம் | ½ கிலோ |
| 4 | விபூதி | 3 பாக்கட் |
| 5 | கற்பூரம் | 5 பாக்கட் |
| 6 | ஊதுபத்தி | 5 பாக்கட் |
| 7 | தீப்பெட்டி | 3 |
| 8 | நெல்பொறி | 1 லி |
| 9 | நெல் உமி | 1 லி |
| 10 | பசு நெய் | ½ லி |
| 11 | ஓம சமித்து | 2 கட்டு |
| 12 | செம்மண் | 1/4 கிலோ |
| 13 | வெள்ளைச்சுண்ணாம்பு | 1 பாக்கட் |
| 14 | வெற்றிலை | 5 கவுளி |
| 15 | ஏரச பாக்கு | ½ கிலோ |
| 16 | விரலி மஞ்சள் | ¼ கிலோ |
| 17 | பு. அரிசி | 2 கிலோ |
| 18 | பச்சரிசி | 7 கிலோ |
| 19 | தேங்காய் | 25 |
| 20 | பழம் | 100 |
| 21 | நாட்டு சர்க்கரை | ¼ கிலோ |
| 22 | தசாங்கம் | 2 பாக்கட் |
| 23 | பன்னீர் | 3 பாட்டில் |
| 24 | அச்சு வெல்லம் | 1 கிலோ |
| 25 | தொடர் பூ | 5 முழம் |
| 26 | முகூர்த்த மாலை | 2 |
| 27 | அரளிப்பூ மாலை | 2 |
| 28 | ஊஞ்சல் மாலை | 2 |
| 29 | மாவிலை | 10 கொத்து |
| 30 | 5 பிரி சணல் | 200 கிராம் |
| 31 | திரி | 5 பாக்கட் |
| 32 | பருத்திக்கொட்டை | 100 கிராம் |
| 33 | 1 ரூபாய் நாணயம் | 100 |
| 34 | தென்னங்க்குறுத்து | 2 |
| 35 | காயுடன் வாழைக்கம்பம் | 2 |
| 36 | 6 அடி உயர வாழைக்கம்பம் | 3 |
| 37 | நல்லெண்ணை | 1லி |
| 38 | காப்பு நூல்கண்டு | 1 |
| 39 | காய்ச்சாத பசும்பால் | ½ லி |
| 40 | மஞ்சள் துணி 3 X 2 அடி | 1 |
| 41 | ஊஞ்சல் பாட்டு புக் | 1 |
| 42 | 1 அடி சதுரத் துணி | 1 |
| 43 | குடம் | 4 |
| 44 | பெரிய குத்து விளக்கு | 2 |
| 45 | சின்ன விளக்கு | 1 |
| 46 | கல்யாண அகல் விளக்கு | 1 |
| 47 | பெரிய கரண்டி | 1 |
| 48 | சின்ன கரண்டி | 1 |
| 49 | சொம்பு | 1 |
| 50 | பஞ்சபாத்திரம் | 2 |
| 51 | உத்தரணி | 2 |
| 52 | 10” தட்டு | 3 |
| 53 | 13” தட்டு | 3 |
| 54 | 14” தட்டு | 2 |
| 55 | 18” தட்டு | 1 |
| 56 | பிளாஸ்டிக் கப் | 5 |
| 57 | சின்ன பிளாஸ்டிக் கப் | 10 |
| 58 | அரிவாள் | 1 |
| 59 | மணி | 1 |
| 60 | தூபக்கால் | 1 |
| 61 | பூஜைத்தட்டு | 2 |
| 62 | மனைப்பலகை | 4 |
| 63 | முக்காலி | 3 |
| 64 | பன்னீர் செம்பு | 1 |
| 65 | சந்தனப் பேலா | 3 |
| 66 | ஓம் தட்டு | 1 |
| 67 | சிங்கக்கொடி | 1 |
| 68 | ஈக்கிப்பேழை மூடி | 2 |
| 69 | நாழியரிசிக்கூடை | 1 |
| 70 | எழுத்தாணி | 1 |
| 71 | சிவப்புப் பட்டுதுண்டு | 2 |
| 72 | சால்வை | 2 |
| 73 | முகூர்த்தக்கால் | 1 |
| 74 | பேய்க்கரும்பு | 1 |
| 75 | அரசங்குச்சி கிளையுடன் | 1 |
| 76 | புற்று மண் | தேவையான அளவு |
சிரப்பு, கரகம் மற்ற சாமான்கள்
| எண் | பொருள் | அளவு |
|---|---|---|
| 1 | பானை | 1 |
| 2 | குடம் | 1 |
| 3 | சின்ன சட்டி | 3 |
| 4 | கரகப்பானை சிறியது | 2 |
| 5 | மூடி | 2 |
| 6 | நவதானியம் | 1 பாக்கட் |
| 7 | நாவிதனுக்கு சட்டி | 1 |
இந்த லிஸ்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் எனில்
webadmin@ai100.co.in க்கு
இ -மெயில் அனுப்பவும்.